பிரதமர் பதவியை தியாகம் செய்யும் மகிந்த - சிரேஷ்ட அமைச்சர் வெளியிட்ட தகவல்
prime minister
mahinda rajapaksha
stepdown
Senior Minister
By Sumithiran
“சர்வகட்சி அரசாங்கத்திற்காக தனது பிரதமர் பதவியை தியாகம் செய்யத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எங்களிடம் கூறினார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அரசதலைவரும் பிரதமரும் இன்று இரவு கூடி இறுதி முடிவு எடுப்பார்கள்” என அவர்மேலும் தெரிவித்தார்.
இதேவேளை சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணைக்கு அரச தலைவர் மற்றும் பிரதமர் இருவரும் சாதகமான பதிலை வழங்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி