மகிந்தவை விலக்க வலுக்கும் ஆதரவு
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச வழிவிடவேண்டும் என்று கோரியிருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்துக்களை தான் ஆமோதிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு, தனது டுவிட்டர் தளத்தில் ஆதரவை வெளியிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைத்து விரைவில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். எனவே மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று தாம் கருதுவதாக ஹேரத் கூறியுள்ளார்.
இதன்படி 6-8 மாதங்களுக்கு ஒரு தேசிய, காபந்து வடிவிலான சிறிய அரசாங்கத்தை நியமிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
8 மாதங்களுக்குப் பின் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்குள் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு சமாளிக்கப்படும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.