அரசியலில் இருந்து ஓய்வு : மகிந்தவின் சகோதரர் வெளியிட்ட அறிவிப்பு
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்திருந்த தன்து வீட்டில் இருந்து நேற்றையதினம் வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி அரசியலில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் மகிந்தவின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்சவும் (chamal rajapaksa)அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று 82 வயதான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
"அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமல் ராஜபக்சவின் புதல்வரான சசீந்திர ராஜபக்ச நில முறைகேடு தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
