தாய் நாட்டிற்கு துரோகம் இழைத்தால் மீண்டும் எழுவேன்.! மகிந்த அதிரடி அறிவிப்பு
சட்டத்திற்கும் தனது மக்களுக்கும் மாத்திரமே தான் தலை வணங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்களை இயற்றியதன் பின்னர் 24 மணி நேரத்திற்குள் விஜேராம வீட்டை விட்டு தான் வெளியேறியதாக மகிந்த கூறியுள்ளார்.
அரசியல் வழிகாட்டுதல்
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், “என் மூத்த மகன் நாமல் சொன்னதுபோல், நான் ஆரம்பித்த கிராமத்திற்கே திரும்பிவிட்டேன். எங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வந்தேன்.
இப்போது என் கிராமத்தில் புளி மீன் சாப்பிட்டு மகிழ்கிறேன். கொழும்பை கைப்பற்ற தேவையில்லை. எல்லாம் இந்த மண்ணிலிருந்தே துவங்கியது.
அரசியலில் சரியான வழிகாட்டுதல் மிக முக்கியம் என்பதை என் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் பண்டாரநாயக்கவிடம் கற்றுக்கொண்டேன்.
என் மறைந்த தந்தை ரூஹுனு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர். நானும் 1970ஆம் ஆண்டில் இளைய அமைச்சராக இருந்தபோது அவற்றை வெளிப்படுத்தினேன்.
அடக்குமுறை
மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையிலும், தங்காலையில் கார்ல்டனில் அமைந்திருந்த சட்ட உதவி மையத்திலும் நான் பணியாற்றினேன்.
மக்களின் உண்மையான போராட்டங்கள் காலடிப்பயணம், மனித சங்கிலி போன்ற ஜனநாயக வழிகளில்தான் நடக்க வேண்டும். அரசியல் அழுத்தங்களைத் தாண்ட ஜனநாயகத்திற்கு வெளியே யாராலும் செல்ல முடியாது” என்றார்.
மேலும், மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே வலிமை என்ற மகிந்த, “எனக்கு மக்களின் அன்பும் விசுவாசமும் தவிர வேறொன்றும் முக்கியமல்ல. என் மனைவி சிரந்தி எப்போதும் எனக்கு மன சுதந்திரம் கொடுத்து உற்சாகப்படுத்தியவர்.
என் பாதுகாப்பு அதிகாரியும் பணிக்கடமையைத் தாண்டி எனக்கு அன்பான உறவாக இருக்கிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “இந்த சிங்கக் கொடியின் கீழ் வாழும் ஒரே தாயகத்திற்கு யாராவது துரோகம் செய்தால், அதற்கு எதிராக எந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன்” எனவும் மகிந்த ராஜபக்ச எச்சரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
