பலஸ்தீனத்தில் மகிந்த..!
பலஸ்தீனத்தில் உள்ள வீதியொன்றுக்கு இனப்படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது, பலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் நாடுகளான இஸ்ரேல் அமெரிக்கவுடன் இணைந்து தான், தமிழ் மக்களை மகிந்த ராஜபக்ச அன்று கொன்று குவித்தார்.
இந்நிலையில், அப்படிப்பட்ட ஒருவரின் பெயரை எதற்காக ஒரு விடுதலை போராட்ட மண்ணில் உள்ள வீதியொன்றுக்கு சூட்டியிருக்கின்றார்கள்.
அதனடிப்படையில், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மோதல்களை சற்று உற்று நோக்கினால் இந்த இரண்டு தேசங்களும் ஈழத்தமிழர்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் சம்பந்தப்பட்ட பல சந்தர்பங்களை காணக்கூடியதாக இருக்கும்.
மேலும், பலஸ்தீனத்திற்கும் மகிந்தவுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் தமிழர் இனப்படுகொலை தொடர்பான விடயங்களையும் விரிவாக எடுத்துரைக்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..