நுவரெலியாவில் மகிந்த எடுத்த தீர்மானம் - கைமாறுமா பிரதமர் பதவி?
புதிய வருடத்தின் ஆரம்பத்துடன் அரசாங்கம் பல மாற்றங்களைச் செய்யும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பிரதமர் பதவி உட்பட அமைச்சரவையில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
பிரதமர் பதவி தொடர்பில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும்(Mahinda Rajapaksa) தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஏமாற்றம் அடைந்து கடந்த வார இறுதியில் நுவரெலியாவில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது.
இந்த விரக்தியால், அமைச்சரவை கூட்டத்தில் கூட கலந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
எனினும், ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், பிரதமர் பதவியை பசில் ராஜபக்சவிடம்(Basil Rajapaksa) வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.