ரணிலைப் பார்வையிட்ட பின்னர் மகிந்த வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் ரணிலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மகிந்த, “அரசியல் செய்தால் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் அதை ஏற்றுக் கொள்வார். அவர் இந்த கைதை அலட்டிக் கொள்ளவில்லை.
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அரசியலில் ஈடுபடும் போது இவ்வாறான பயணங்கள் சதாரணமானதாகும்.
மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள், பழிவாங்கல் மட்டுமே நடக்கிறது“ என தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் (Mahinda Rajapaksa) சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகநலன்களை விசாரிப்பதற்கு
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக மகிந்த ராஜபக்சவும் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை ரணிலைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேதாசவும் (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும் மகசின் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்