அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: வெளியான அறிவிப்பு
சில அமெரிக்க (United States) பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக கனடா (Canada) அறிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அறிவிப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் விதமாக, பில்லயன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி விதிப்பு
அமெரிக்காவின் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்காததை அடுத்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 வீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்தார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, ஆரஞ்சு ஜூஸ் முதல் சலவை இயந்திரம் வரை கிட்டத்தட்ட 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 வீத வரியை பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.
இந்தநிலையில் தற்போதைய புதிய அறிவிப்பானது, ட்ரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பிறகு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புதிய நடைமுறை
இருப்பினும் வாகனங்கள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய பொருட்களுக்கான வரிகள் தொடர்வதாக மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
புதிய வரி குறைப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் வெளியிட்ட தகவலில், கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த மாற்றம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வரி குறைப்பு நடவடிக்கையானது, இருநாடுகளுக்கு இடையே இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுதந்திரமான வர்த்தகங்களை மீண்டும் நிலைநிறுத்தும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நடைமுறையானது செப்டம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 3 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்