பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை!
பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவரின் கொலை தொடர்பில், 37 வயது இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை(21) காலை 7:37 மணியளவில் கார்டிஃப் நகரின் சவுத் மோர்கன் பிளேஸ் (South Morgan Place) என்ற இடத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெற்கு வேல்ஸ் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபரான இலங்கையர்
அதனைதொடந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 32 வயதான நிவுன்ஹெல்லகே டோனா நிரோதா கலப்னி நிவுன்ஹெல்ல என்ற பெண்ணை உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்டனர்.
பின்னர், நிரோதா என அழைக்கப்பட்ட குறித்த பெண்ணை நன்கு அறிந்திருந்த திசர வெரகலகே என்ற 37 வயதுடைய இலங்கை இளைஞன், சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சீவோல் ரோட் பகுதியில் வைத்து காவல்துறையினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
மக்களிடம் கோரிக்கை
பிறகு சந்தேகநபரான இளைஞன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கார்டிஃப் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ நேரத்தில் காலை 7.30 முதல் 8.30 வரை ரிவர்சைடு மற்றும் ஸ்ப்ளாட் பகுதிகளில் காணப்பட்ட சாம்பல் நிற ஃபோர்டு ஃபியஸ்டா காரை தொடர்பாக ஏதேனும் தகவல், சிசிரிவி காட்சிகள் அல்லது டேஷ் கேம் பதிவுகள் இருப்பின் வழங்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 6 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்