பாப்பரசரிடம் உக்ரைன் அரச தலைவர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
russia
war
ukraine president
pope francise
By Sumithiran
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்த மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என, பாப்பரசர் பிரான்சிஸிடம் உக்ரைன் அரச தலைவர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
இந்த உரையாடல் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸெலென்ஸ்கி, உக்ரைனில் நிலவும் “கடினமான மனிதநேய சூழல்” மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் ரஷ்யப்படையினரால் தடுக்கப்படுவது குறித்து பாப்பரசர் பிரான்சிஸிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இருநாட்டு போரை நிறுத்துவது தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என அவர் பாப்பரசரை வலியுறுத்தியுள்ளார்.
வருங்காலத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக ஜெருசலேம் இருக்கும் என, ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி