சிவராத்திரி தினத்தில் நல்லூரில் வாள்வெட்டு - பிரதான சந்தேக நபர் சிக்கினார்
Sri Lanka Police
Jaffna
By Sumithiran
சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உபகாவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்பு

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி