ஞானசார தேரருக்கு வழங்கிய மன்னிப்பு: தெளிவில்லா நிலையில் மைத்திரி

Maithripala Sirisena Sri Lanka
By Dharu Sep 11, 2026 10:57 AM GMT
Report

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தகவலும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் எப்போதும் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !

ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !

நீதிமன்ற தீர்ப்பு 

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அது தொடர்பில் எனக்கு இன்னும் சரியான விபரங்கள் தெரியாது.

ஞானசார தேரருக்கு வழங்கிய மன்னிப்பு: தெளிவில்லா நிலையில் மைத்திரி | Maithri Concerned About The Gnanasara Thero Case

அதனால் அதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.

ஜனாதிபதி மன்னிப்பு உரிய ஆய்வுகளின் பின்னரே வழங்கப்பட்டது. எனது காலகட்டத்தில் நான் மிகவும் கருணையுடன் அந்த நடவடிக்கையை மேற்கொண்டேன்.

இப்போது எந்த சூழ்நிலையில் இந்த விடயம் உள்ளது என்பது குறித்து என்னால் கூற முடியாது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எனது பதவிக் காலமும் குறைக்கப்பட்டது. எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

அதன் பின்னர் என்னைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அந்த மாற்றங்களை நீக்கி, 19ஆவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்களுக்குப் பதிலாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினர்.

அதன் மூலம் ஜனாதிபதிக்கு பெருமளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது அது தொடர்பில் எங்களால் எதுவும் கூற முடியாது.” என்றார். 

மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்