தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம்! சஜித் பிரேமதாசவின் நிகழ்விற்கு சென்ற மைத்திரி (படங்கள்)
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவரின் கௌரவ நிகழ்விற்கு சென்றிருந்த விடயம் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் திகதி சமூக, கலாசார மற்றும் சமய ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான சேவைகள் விசேடமாக பாராட்டு அதனை கௌரவிக்கும் வகையில் சிறிலங்கா ராமன்ய மகா நிகாயவின் உயரிய விருதான “சாசன கீர்த்தி தேசாபிமானி சிறிலங்கா ஜனரஞ்சன” கௌரவ நாமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார். இது தென்னிலங்கை அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுசன பெரமுனவுக்கும் இடையில் நீண்ட பனிப்போர் இடம்பெற்று வருகின்றது. சுதந்திர கட்சி விரும்பினால் வெளியேறலாம் என பொதுசன பெரமுன பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, விமல் வீரவங்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து அரச மோதல்கள் உக்கிரமடைந்துள்ளது. மக்களை அரசாங்கத்திற்கு எதிராக ஒண்றுதிரட்டும் வகையில் செயற்படத் தொடங்கியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் நாளக்கு நாள் அதிகரிக்கு விலையேற்றத்தினால் மக்கள் வீதியில் இறக்கிப் போராட வேண்டியுள்ளது.
இந்நிலையில தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் வகையில் மும்முனைகள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.






