நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய இன்னும் சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளார்.
வீட்டை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், தற்போது புதிய வீட்டைக் கண்டுபிடித்துள்ளதாகவும், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வீட்டில் சிறிது காலம் தங்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது இருக்கும் வீடு எந்த வசதியும் இல்லாமல் நரகத்தைப் போன்று உள்ளதாகவும் அதை மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இட வசதியின்மை
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன கூறுவது போல், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளன.
எனவே, அவரது மூன்று பிள்ளைகளில் இருவர் ஒரு நாள் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தால், அவருக்கு தங்க இடம் இருக்காது என கூறப்படுகிறது.
வீடு வழங்க முன்வந்தவர்கள்
இவ்வாறானதொரு பின்னணியில், உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய முடிவு செய்தபோது, பலர் தனக்கு வீட்டுவசதி வழங்க முன்வந்ததாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது தனக்கு கூடுதல் வருமானம் எதுவும் இல்லை என்றும், ஓய்வூதியம் மட்டுமே இருப்பதாகவும், இறுதியாக மிகவும் மகிழ்ச்சியுடன் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
