விமர்சனங்களுக்கு மத்தியில் திருமண நிகழ்வில் பாடி மகிழ்ந்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாடிய பாடல் ஒன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொழும்பில் இடம்பெற்ற ஒரு திருமண நிகழ்வில் மைத்திரிபால சிறிசேனவும் டட்லி சிறிசேனவும் கலந்து கொண்டனர்.
அந்த சந்தர்ப்பத்தில், மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சியுடன் ஒரு பாடலைப் பாடுவதைக் காண முடிந்தது.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலத்திற்கு பின்னர் பெரிதும் விமர்சனங்களுக்கு உள்ளானதைபோல சிறிசேன இவ்வாறு பாடலை பாடியமை சில தரப்பினரிடையே விமர்சனங்களை அடுக்கி வருகிறது.
குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற சில ஊடக சந்திப்புக்களிலும் அவர் சரியாக பதில் வழங்காது செல்கின்றமை போன்ற காணொளிகளும் சமூக வலைதளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கும் பின்னணியில் இலங்கையின் தற்போதைய நடைமுறை அரசியல் உள்ளிட்ட செய்திகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |