சிஐடியில் இருந்து பல மணி நேரத்திற்கு பின் வெளியேறிய மைத்திரி!
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது.
.அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். .
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) இன்று (21.04.2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may like this...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        