குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ள மைத்திரி
முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று(3) முன்னிலையாகியுள்ளார்.
இதன் போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் 2 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இது தொடர்பான சர்ச்சைகள் முற்றுப்பெறாத நிலையில், அண்மையில் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என தனக்கு தெரியும் என்று கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்தானது அரசியல் வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் சர்ச்சைகுரிய விடயமாக பேசப்பட்டது.
இந்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மார்ச் (25) ஆம் திகதியன்று அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம்
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும் வகையில் திணைக்களத்தின் பிரதான நுழைவாயில் இன்றி பிறிதொரு வாயில் வழியாக வெளியேறினார்.
இந்நிலையில் இன்றும் இந்த விடயம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |