சிறிலங்கா அதிபர் தேர்தல் - மைத்திரியும் களமிறங்கத் திட்டம்
Dullas Alahapperuma
Maithripala Sirisena
Sajith Premadasa
President of Sri lanka
By Sumithiran
இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பல கட்சிகளில் இருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் அதிபர் தற்போது பரிசீலித்து வருகின்றார்.
அதன்படி, மிக விரைவில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவின் எதிர்க் கட்சி,மைத்திரிபால சிறிசேனவை அதிபராக்க சில இணக்கப்பாடுகளை காட்டி வருவதாகவும், அரசாங்கத்தில் உள்ள சுயாதீனமான குழுக்களும் அரசாங்கத்தில் உள்ள ஒரு குழுவும் மைத்திரியை ஆதரிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
