உச்சக்கட்ட பதற்றம்: உக்ரைனை முழுவீச்சில் சிதைக்க தொடங்கிய ரஷ்யா!!
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மீது ரஷ்யா கடந்த இரவு 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கட்டிடங்கள் சேதம்
அத்துடன் கீவ் நகரில் 8 பகுதிகள் நேரடியாக தாக்கப்பட்டுள்ளதாகவும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிதைவுகள் விழுந்துள்ளதாகவும் கீவ் மேயர் விடாலி கிளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் 09 ஏவுகணைகள் மற்றும் 63 ஷாஹெட் ட்ரோன்கள் கீவ் மீது விழுந்துள்ள நிலையில், வீடுகள், பாடசாலைகள், கடைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆயுதங்கள்
அத்துடன், உக்ரைனின் விமான எதிர்ப்பு படை, 539 ஷாஹெட் வகை ட்ரோன்கள், 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 4 இஸ்காண்டர் க்ரூஸ் மிசைல்கள், 1 கின்ஷால் ஏரோபாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவற்றை எதிர்கொண்டதாகவும் 478 தாக்குதல்கள் நுட்ப ரீதியாக செயலிழக்க செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Overnight, russian invaders launched a massive missile attack on Ukraine, using 11 missiles and 539 strike UAVs. The main target of the attack was Kyiv.
— Defense of Ukraine (@DefenceU) July 4, 2025
Ukrainian air defenders destroyed 478 aerial targets:
- 268 Shahed-type and other UAVs were shot down, 208 were suppressed via… pic.twitter.com/YNKeTR2ocG
இவ்வாறானதொரு பின்னணியில், உக்ரைனின் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலன்ஸ்கி, “இது திட்டமிட்ட, மிகப்பெரிய மற்றும் கொடூர தாக்குதலாகும். ரஷ்யாவுக்கு போரை முடிக்க எந்த எண்ணமும் இல்லை என்பது இதனாலே தெரிய வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
