சீனாவில் பரபரப்பு: மாயமான ஜனாதிபதி ஜி ஜின்பிங் - இந்தியாவுக்கும் எச்சரிக்கை!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்(Xi Jinping) கடந்த சில நாட்களாக பொதுவெளியில் காணப்படவில்லை. இதனால், சீனாவின் ஆட்சி அமைப்பில் பெரிய மாற்றம் நடக்கப்போகிறதா? என்பது சர்வதேச அளவில் பாரிய கேள்வியாக எழுந்துள்ளது.
ஜி ஜின்பிங் 2013 முதல் சீன ஜனாதிபதியாக உள்ள நிலையில், 2023-ல் மூன்றாவது முறையாக பதவியேற்ற அவர், 2028 வரை ஆட்சி செய்யவிருக்கிறார்.
ஆனால், கடந்த மே 21 முதல் ஜூன் 5 வரை அவர் இரண்டு வாரங்களுக்கு மாயமாக இருந்தார். தற்போது மீண்டும் அவர் தோன்றியிருந்தாலும் சோர்வாகவும் எதிலும் ஈடுபாடு இல்லாதது போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புறக்கணிக்கப்பட்ட பிரிக்ஸ் மாநாடு
இதேவைளை, எதிர்வரும் ஜூலை 6, 7-ல் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் அவர் முதல் முறையாக பங்கேற்கவில்லையென்பது இந்த சந்தேகங்களை மேலும் வலுப்பெற செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் முந்தைய ஜனாதிபதி ஹூ ஜிண்டோவும் இப்படியே திடீரென வெளியேற்றப்பட்டு, ஜனாதிபதி பதவியை ஜி ஜின்பிங் ஏற்றார். அதுபோலவே தற்போது ஜி ஜின்பிங் மீது உள்ள ஆதரவு குறைந்து, அவர் பதவியில் இருந்து விலகப்போகிறாரா? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
மாற்றாக வருபவர் யார்?
மேலும், ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமான பல ஜெனரல்கள் சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இது அவரது ஆட்சி நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஜி ஜின்பிங் இல்லாத சூழலில், சீன ராணுவ ஆணையத்தின் முதல் துணைத்தலைவர் ஜாங் யூசியா நாட்டின் நிர்வாகத்தை சமாளித்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் சீன அரசியல் நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினரான பொலிட்பியூரோவில் இடம் பெற்றவர் என தெரியவருகிறது.
அத்தோடு, டெக்னோகிராட் வங்க் யங் என்பவரும் ஜனாதபதி பதவிக்கு முன்னிலையில் உள்ளவராகக் கூறப்படுகிறது. அவர் 2022-ல் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட தயாராக இருந்தவர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு எச்சரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், சீனாவில் உள்நாட்டுப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அவற்றை மறைக்க வெளிநாட்டு விவகாரங்களை தூண்டும் பழக்கம் அந்நாட்டுக்கு உள்ளதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சீனா இந்தியாவுடன் எல்லை பிரச்சனைகளை தூண்டும் சாத்தியம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
