ஈரானின் திடீர் முடிவால் மீண்டும் பதற்றம்
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையின் பின்னணியில், ஈரான் மத்திய மற்றும் மேற்கு வான் எல்லையை மீண்டும் தற்காலிகமாக மூடியுள்ளது.
இஸ்ரேலுடனான போர்நிறுத்தத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பு
இது தொடர்பில் ஈரானின் போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அகவான் தெரிவித்ததாவது, “சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒருங்கிணைப்புக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், பாதுகாப்பு காரணங்களால் வான் பரப்பை மூடுகிறோம்.
மத்திய மற்றும் மேற்கு ஈரானில் உள்ள வான்வழி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியை பயணிகள் விமானங்கள் பயன்படுத்தலாம்.”
மேலும், மெஹ்ராபாத், இமாம் கொமேனி உள்ளிட்ட விமான நிலையங்கள் ஜூலை 3ம் திகதி மதியம் 2 மணி வரை இயங்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
காரணங்கள்
கடந்த ஜூன் 25ஆம் திகதி இஸ்ரேலுடன் நடந்த யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் வான் பரப்பை மீண்டும் திறந்திருந்தது. ஹஜ் யாத்திரையை முடித்துச் சவூதி அரேபியாவிலிருந்து திரும்பும் யாத்ரீகர்களுக்காக இது செய்யப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் வான் எல்லை மூடப்பட்டிருப்பது, எதிர்பாராத நடவடிக்கையாகவும், பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த முடிவுக்கான தெளிவான காரணங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணமே என கூறப்பட்டாலும், அதன் பின்னணியில் உள்ள மெய்யான தகவல் அறியப்படவில்லை என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
