கோட்டாபயவின் தெரிவு தவறான முடிவு - மன்னிப்பு கேட்கும் அமைச்சர்
Gotabaya Rajapaksa
Mrs Pavithradevi Wanniarachchi
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
கடந்த அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தவறான முடிவு என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் கூறினார்.
சரியான தெரிவு
எனினும், நாடாளுமன்றத்தில் இருந்து அதிபரை தெரிவு செய்யும் போது ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்வதற்கு கட்சி சரியான தீர்மானத்தை எடுத்ததாகவும், அந்த சரியான தீர்மானத்தின் பலனை நாட்டு மக்கள் இன்று பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹபரணையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி