13 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த நாட்டில் கால் பதித்த மலாலா யூசுப்
உலகப் புகழ்பெற்ற சமூக ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய்(Malala Yousafzai), 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்குத் (pakistan)திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது 27 வயதாகும் அவருக்கு, 2021 ஒக்டோபரில் தலிபான் துப்பாக்கிதாரியால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டபோது, 15 வயது.
சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஷாங்லா கிராமத்தில் வசிக்கும் மலாலா யூசுப்சாய், தனது கிராமத்திற்கு திரும்பிய பிறகு சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் வருகை
மலாலா யூசுப்சாய் தனது தந்தை, கணவர் மற்றும் சகோதரருடன் உலங்கு வானூர்தி மூலம் தனது கிராமத்திற்கு வந்தார். தனது குறுகிய பயணத்தின் போது, குடும்ப உறுப்பினர்களையும், அவர் நிறுவிய மலாலா அறக்கட்டளையால் கட்டப்பட்ட ஷாங்க்லா பெண்கள் உயர்நிலைப் பள்ளியையும் பார்வையிட்டார்.
அவரது வருகைக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்