சர்வதேச அரசியலில் ஏற்படும் அதிர்ச்சி மாற்றங்கள்! பதவி விலகினார் மலேசியப் பிரதமர்
மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் இன்று விலகி உள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
அவரது ராஜினாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அமைச்சரவை இன்று பதவி விலகிய தகவலை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று பதவி விலகுவார் என கடந்த இரு தினங்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
இன்று திங்கட்கிழமை மலேசிய மாமன்னரைச் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைப்பார் என பிரதமர் துறையின் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையில் ஆளும் பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக தோட்டத்தொழில் அமைச்சர் பதவி வகித்த கைருடின் அமான் ரசாலி தெரிவித்துள்ளார்.