வாழவழியில்லை, தங்க நகைகளை அடகு வைக்கும் மக்கள்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Cardinal Malcolm Ranjith
By Laksi
நாட்டில் சுமார் 60 வீதமான மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கம்பஹா மிரிஸ்ஸவத்த பகுதி தேவாலயமொன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நகைகளை அடகு வைத்து வாழும் மக்கள்
மேற்குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை மேற்கொள்ள முடியாது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணத்தினால் தங்களிடமுள்ள ஆபரணங்களை அடகு வைத்தேனும் வாழ்க்கையை கொண்டு நடத்த மக்கள் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வாழ்வதற்கு போதியளவு சம்பளம் அல்லது வருமானம் கிடைக்காத காரணத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி