இந்தியாவிற்கு எதிரான மாலைதீவின் அடுத்த நகர்வு: உருவாகிறது புதிய சர்ச்சை
இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டுள்ள மாலைதீவு தற்போது , துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.
அதன்போது, துருக்கியிடமிருந்து மாலைதீவு ட்ரோன்களை வாங்கியுள்ளதாகவும் அவற்றை இயக்குவதற்கு ட்ரோன் தளமொன்றை நிறுவ முயற்சிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முரண்பாடு
இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து உறவு இருந்து வந்தாலும், பெரும்பான்மையான விடயங்களில் இந்தியா துருக்கியிடமிருந்து முரண்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் இந்தியாவிற்கு அதில் உடன்பாடு இல்லை.
மாலைதீவின் செயல்
அதேவேளை, அணுசக்தி விநியோக நாடுகள் என்ற குழுவொன்றுக்குள் இந்தியா நுழைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இந்த நிலையில் இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான உறவு நிலையற்றதாக சென்று கொண்டிருக்கின்றது.
அதன் அடிப்படையில், தற்போது, இந்தியாவுடனான நட்பைக் கைவிட்டுள்ள மாலைதீவு இந்தியாவை எரிச்சலடைய வைக்கும் வகையில் துருக்கியுடன் ஆயுத ஒப்பந்தமொன்றினை முன்னெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |