பிரச்சினைக்குள்ளாகும் மாலைதீவு: உதவிக்கரம் நீட்டும் சீனா
கடும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வந்த மாலைதீவுக்கு திபெத் பனிமலைகளில் இருந்து 1,500 டன் குடிநீரை சீனா வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விடயத்தை மாலைதீவு அரசு நேற்றையதினம்(26) குறிப்பிட்டுள்ளது.
குடிநீர் உற்பத்தி
இந்த தீர்மானமானது, சீனாவின் திபெத் தன்னாட்சி மண்டல தலைவர் யான் ஜின்ஹாய், மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை கடந்த நவம்பரில் சந்தித்த போது எடுக்கப்பட்டதாக மாலைதீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவினால் வழங்கப்பட்ட குடிநீரானது, திபெத்தில் உயர்ரக தயாரிப்பு நிறுவனங்கள் குடிநீர் உற்பத்தி செய்கின்றன, சுத்தமான, தெளிவான, அதிக கனிமங்கள் கொண்ட நீர் திபெத் பனிப்பாறைகளில் இருந்து பெறப்படுகிறது.
மாலைதீவுக்கு உதவி
சீனாவுக்கு ஆதரவான அரசு மாலைதீவில் தெரிவானது முதல் சீனா பல்வேறு வகைகளில் மாலைதீவுக்கு உதவி வருகிறது.
அத்தோடு, மாலைதீவு அதிபர் சீனா அபாயகரமில்லாத ஆயுதங்கள் மற்றும் ஆயுத பயிற்சியை மாலைதீவுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |