மொஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்! பின்னணியில் செயற்பட்ட வல்லரசு நாடுகள்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உட்பட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத இயக்கம்
அத்தோடு, அந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், அதன் பின்னணியில் உக்ரைன் இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மொஸ்கோவில் கடந்த 23 ஆம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் 139 பேர் பலியானதோடு குற்றச்செயலில் ஈடுப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
உளவுத்துறை தகவல்
இந்நிலையில், இது தொடர்பில் ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் தெரிவிக்கையில், “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன.எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம்.
இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷ்யாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன, மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷ்யாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |