இந்திய விமானத்திற்கு தடைவிதித்த மாலைதீவு அதிபர் : பறிபோன சிறுவனின் உயிர்
மாலைதீவில் இந்திய விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபரின் அனுமதி பெறவேண்டுமென்பதால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாலைதீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட முகமது முய்சு சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதுடன் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
சிறுவனுக்கு வலிப்பு
மாலைதீவில் ஒவ்வொரு தீவுகளுக்கும் இடையே அவசர உதவிகளுக்காக சென்று வர இந்திய அரசால் ட்ரோனியர் ரக விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை இந்திய படை வீரர்களே இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் மாலைதீவில் கபி அலிப் லிவிங் இல்ஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சமீபத்தில் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மேலதிகசிகிச்சைக்கு தலைநகர் மாலிக்கு விமானத்தில் அழைத்து செல்ல வேண்டிய அவசரம் இருந்துள்ளது.
விமானத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல அதிபரின் அனுமதி
ஆனால் இந்திய விமானத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல அதிபரின் அனுமதி பெற வேண்டி இருந்துள்ளது. இதனால் சில மணி நேரங்கள் தாமதமாகவே சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விமான அனுமதி அளிப்பது தொடர்பான அதிபரின் தாமதத்தால் சிறுவன் உயிர் பலியானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |