இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைதீவு ஜனாதிபதி
Sri Lanka Politician
Sri Lanka
Maldives
World
By Thulsi
மாலைதீவின் (Maldives) ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, மசூத் இமாத் மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு (Mohamed Muizzu) இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
நீண்டகால நட்பு
குறித்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் இரு தரப்பினராலும் ஆராயப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்