சிறுவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 45 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் ஓராண்டுக்கு சத்தான உணவு செய்முறையை வழங்க வேண்டும், அவ்வாறு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றார்.
படிப்படியாக குறையும் பிறப்பு விகிதம்
மேலும், தனது அதிகார வரம்பில் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், 2014ல் 14.5 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தைப்பேறு இல்லாத பெண்கள்
திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் 700 பேர் இருப்பதாகவும், குழந்தைப் பேறு பெறும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதை அண்மித்துள்ளதாகவும், அதனால் பிரசவிக்கும் திறன் கொண்ட பெண்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து இருப்பதாக டொக்டர் ஜகத் குமார தெரிவித்தார்.
இது மிகவும் வருத்தமான நிலை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு சுமார் 140 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதாகவும் இருபத்தைந்தாயிரம் குடும்பங்களில் சுமார் 72000 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
