மன்னாரில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது
மன்னார் சிலாவத்துறை பகுதியில் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக கூறப்படும் 1,200 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் - சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் , நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணும் 45 வயதுடைய ஆணும் என தெரிவிக்கப்படுகின்றது.
1,200 போதை மாத்திரைகள்
மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் கடற்படை அதிகாரிகளால் சிலாவத்துறை , நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றது.
இதேவேளை முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன் சிலாவத்துறை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |