சுற்றுலாப் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது
Galle
Tourism
Arrest
By Sindu
காலி, ருமஸ்சல ஜங்கிள் கடற்கரை பகுதியில் பிரான்ஸ் நாட்டு பெண் சுற்றுலாப் பயணியொருவரிடம் அத்துமீறிய இளைஞர் ஒருவரை உனவட்டுன சுற்றுலா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராகமயிலிருந்து குறித்த சுற்றுலாப் பயணி கடற்கரைக்கு சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே உனவட்டுன சுற்றுலா காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்று விரைந்து செயற்பட்டு சந்தேக நபரை கைது செய்தது.
நீதிமன்றில் முன்னிலை
முதற்கட்ட விசாரணைகள் மற்றும் அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னர், சந்தேக நபர் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக ஹபரதுவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் இன்று (01) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி