ஹபாயா அணிந்து தாய், மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகநபர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கி விட்டு ஹபாயா அணிந்து பெண் வேசம் போட்டு தப்பிக்க முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (26) மாலை ஈச்சநகர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது, தாக்குதல் நடாத்திய (38) குடும்பஸ்தர் ஒருவரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கத்திக் குத்து தாக்குதல்
இந்த நிலையில், தாக்குதலுக்கு இலக்கான தாய் வயது (54) ,மகள் வயது (31) ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் மகள் கந்தளாய் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஈச்சநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடனுக்கு பணம் வாங்கிய நிலையில், அதனை மீளப் பெறுவதற்காக தாக்குதலுக்கு உள்ளான தாய் சென்று கேட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனை பொருட்படுத்தாது தாயின் வீட்டுக்கு சென்று கத்திக் குத்து தாக்குதலை நடாத்தி விட்டு தப்புவதற்கு முயன்றுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகநபர் முகத்தை மூடி ஹபாயா அணிந்து தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில் சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |