யாழில் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடியவருக்கு நேர்ந்தகதி
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபரொருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட காவல்துறை குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந் தலைமையிலான குழுவினரால் குறித்த கைது நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துவிச்சக்கர வண்டிகள் மீட்பு
திருட்டுச் சம்பவமொன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை திருடிய சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபர் தொடர்புபட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கமைய 12 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் கைதான சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளையும் நெல்லியடி காவல்துறையினர் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |