பிரான்ஸில் பெண்களை இலக்கு வைத்து கத்திக்குத்து! சிக்கிய சந்தேகநபர்
பிரான்சின் போர்ட் டி கிளிச்சி (Porte de Clichy) பகுதியில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களை இரண்டு கத்திகளால் தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் இரு பெண்கள் பலத்த காயமடைந்துள்ளளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியவர் மீது சூட்கேஸ்களை வீசியும், அவரது கால்களைத் தட்டிவிட்டும் தரையில் தள்ளி அவரை அசையவிடாமல் பிடித்து முடக்கியுள்ளனர்.
சந்தேகநபரின் அடையாளம்
பின்னர், அங்கு பணி விடுப்பில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி அந்த நபரைத் தடுத்து வைத்துக் கைது செய்ய உதவியுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் முரண்பாடான தகவல்களைக் கூறியதால், அவரின் அடையாளத்தை இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |