ஜெலென்ஸ்கி மற்றும் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் திடீர் சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சந்திப்புகளில் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் விவகாரம்
நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது ஈரானில் நடைபெறும் போர், லெபனானுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகளை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து டரம்ப் விவாதிப்பார் என கூறப்படுகிறது.

Image Credit: Reuters
ஈரான் விவகாரத்தில் தனக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு தலைவர்களும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டிலேயே நெருக்கமாக இருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
இதேவேளை, ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit:The Straits Times
முன்னதாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் குறித்த உளவுத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாக ஜெலென்ஸ்கி சுமத்திய குற்றச்சாட்டையும் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
மேலும், வொஷன்டனில் நடைபெறும் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கிலும் நெதன்யாகு மற்றும் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |