வீரகெட்டியவில் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Arrest
By Pavi
அம்பாந்தோட்டை வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய காவல் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிஞ்சிகுணே, மெதமுலன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்