யாழில் 50 இலட்சம் பெறுமதியுடைய நகை மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடியவர் கைது!
யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் அண்மையில் திருடப்பட்ட நிலையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள வீடொன்றில் அண்மையில் இரவுவேளையில் உடைக்கப்பட்டு பெருந்தொகை வெளிநாட்டுப் பணமும், நகையும் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
சந்தேகநபர் கைது
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி கெலும்பண்டார தலமையிலான குழுவினர், நேற்றைய தினம் பிரதான சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து பெருமளவு நகைகளையும், வெளிநாட்டு நாணயங்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
