யாழ்ப்பாணத்தில் பெண் சிப்பாயிடம் கைவரிசை காட்டியவர் ஐஸூடன் சிக்கினார்
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையைத் திருடிய சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் சிப்பாயின் கைப்பையே இவ்வாறு பறித்து செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு
கைப்பையினுள் ஒரு பவுண் நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் அந்தப் பெண் சிப்பாய் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

உடைமையில் ஐஸ் போதைப்பொருள்
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சந்தேகநபர் கொடிகாமம் பகுதியில் பதுங்கியிருக்கின்றார் என்று கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளது.

சந்தேகநபரைக் கைது செய்த வேளை அவரது உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்