கூர்மையான ஆயுதத்தால் காவல்துறையை தாக்க வந்தவர் சுட்டுக்கொலை
வெலிகந்தவில் கூர்மையான ஆயுதத்துடன் காவல்துறையினரைத் தாக்க வந்த ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று (12) மாலை, மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிளை வெலிகந்த பகுதியில் நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் உத்தரவு இல்லாமல் ஓட்டிச் செல்லப்பட்டது, பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீட்டிற்குச் சென்று மறைந்திருந்தார்.
காவல்துறையினரை தாக்க முயற்சி
மறைந்திருந்த நபரைக் கைது செய்ய முயன்றபோது, அந்த நபர் காவல்துறை அதிகாரிகளை அரிவாளால் தாக்க முயன்றார், அப்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் அந்த நபரின் கால் மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
7 போதைப்பொருள் குற்றச்சாட்டுகள்
உயிரிழந்தவர் இதற்கு முன்னர் 7 போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபராக காணப்பட்டதுடன், தற்போது மேலும் இரண்டு குற்றவியல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்ற இருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |