குடும்பத் தகராறில் நபர் தடியால் அடித்துக் கொலை
குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் வெல்லவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது.
59 வயதான நபரே இவ்வாறு தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திடீர் வாக்குவாதம்
உயிரிழந்த நபருக்கும் அவருடைய சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, ஆத்திரமடைந்த சகோதரர் தடியொன்றால் தாக்கியதில் இந்த மரணம் சம்பவிக்கப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லவ காவல் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விசாரணைகளை நடத்திய காவல்துறையினர், இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான உயிரிழந்தவரின் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.
இக்கொலை குறித்து வெல்லவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்