தகராறு முற்றி கைகலப்பு - ஒருவர் அடித்துக் கொலை..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
மொனராகல, மெதகம திம்புல்தென பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகராறு முற்றியதையடுத்து தாக்குதல்
புத்தாண்டு தினத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் கொலையை செய்த நபரும் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு மொனராகலை சிறிகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சடலம் மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி