எட்டு தேசிய அடையாள அட்டைகளுடன் சிக்கிய நபர்
எட்டு தேசிய அடையாள அட்டைகளை (National Identity Card) தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கண்டியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மேற்குறித்த நபர் உள்ளிட்ட சந்தேகந நபர்கள் பலர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ரந்தோலி பெரஹெரா
நடப்பு வருடத்தின் ரந்தோலி பெரஹெராவைக் கண்டுகளிக்க பெருமளவான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சிவில் உடைதரித்த காவல்துறை குழுக்கள் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறைக்கு அறிவிக்கவும்
பெரஹெராவைப் கண்டுகளித்தல்என்ற சாக்கின் கீழ் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் பொதுமக்களிடையே நடமாடக் கூடும் என்பதால், சந்தேகத்திற்கிடமான நபர்களை அடையாளம் கண்டால் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
