முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் காவல்துறையினரிடம் சிக்கிய நபர்
Mullaitivu
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பின் போது இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பானது நேற்று (04) காவல்துறையினருக்கு ஒருவர் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி இரண்டினை வைத்திருந்ததன் பேரில் 34 வயதுடைய நபர் இடியன் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதோடு குறித்த நபரை விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளனர்.

சிங்கள மக்களுக்கு வடக்கில் குடியேற எந்த அனுமதியும் இல்லை: கறாரான கருத்தை வெளியிடுகிறார் சரத் வீரசேகர
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்