எறும்புத்தின்னியை பிடிக்க குகைக்குள் சென்ற நபர்: பாறை சரிந்து விழுந்ததில் உயிரிழப்பு
Sri Lanka Police
Badulla
Death
By Sindu
பதுளை, கொஸ்லந்தயில் எறும்புத்தின்னியைப் பிடிக்கும் முயற்சியில் குகைக்குள் நுழைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொஸ்லந்த காவல்துறையினரின் அதிகார வரம்புக்குட்பட்ட ஊவா மாவேலகம பகுதியில் நிகழ்ந்துள்ளது.
சரிந்து விழுந்த பாறை
அந்த நபர் எறும்புத்தின்னியைப் பிடிக்கும் நோக்கத்தில் குகைக்குள் தவழ்ந்து சென்றபோது, குகைக்கு மேலே இருந்த ஒரு பெரிய பாறை அவர் மீது சரிந்து விழுந்ததில், அவர் குகைக்குள்ளேயே உயிரிழந்தார்.

கொஸ்லந்த காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி