யாழில் கடைக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Death
By Thulsi
யாழில் (Jaffna) பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று மதியம் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தார்.
மரண விசாரணை
இதன்போது கடைக்கு முன்னாலே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்