தமிழர் பகுதியில் தொலைபேசி கோபுரத்தில் ஏறிய நபருக்கு நேர்ந்த துயரம்
வவுனியா(Vavuniya) - மகாரம்பக்குளத்தில் தொலைபேசி கோபுரத்தை சீர்செய்யச் சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(01.02.2025) இடம்பெற்றுள்ளது.
அத்தே மஹகிரில்ல, நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய எச். எம். சுதேஷ் சதுரங்க ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்
தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 50 மீற்றர் உயர தொலைபேசி கோபுரத்தின் பாகங்களை அகற்றும் போதே தொழில்நுட்ப உத்தியோகத்தர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஊழியர்களுடன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி சில பாகங்களை அகற்றும் போது உதிரி பாகங்கள் அடங்கிய பையுடன் கீழே விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |