கால்பந்து மைதானத்தில் இளைஞனால் ஏற்பட்ட பரபரப்பு (காணொளி)
கால்பந்து போட்டி இடம்பெற்ற மைதானத்திற்குள் திடீரென சென்ற இளைஞன் ஒருவன் தனது காதலை வெளிப்படுத்த மேற்கொண்ட முயற்சி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது இரண்டு அணி வீரர்கள் Warm Up செய்து கொண்டிருக்கும் சமயத்தில் மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் குதித்து செல்கிறார்.
மைதானத்தில் திடீரென விழுந்த இளைஞன்
அந்த சமயத்தில் அவர் திடீரென கீழே விழ காலில் ஏதோ காயம் ஏற்பட்டது போல அவர் மைதானத்தில் துடிதுடித்துள்ளார்.
இதனைக் கண்டதும் அங்கே நிற்கும் சிலர் அவரை எழுப்பி என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளவும் முயற்சிக்கின்றனர். அப்போது அவருடன் வந்த பெண் ஒருவரும் என்ன ஆனது என பார்ப்பதற்காக அந்த ரசிகரின் அருகே மைதானத்தில் வருகிறார்.
இதனால் சற்று பரபரப்பான சூழலும் அங்கே உருவாகும் நிலையில், யாரும் எதிர்பாராத மற்றொரு சம்பவம் அங்கே அரங்கேறுகிறது. அவருடன் வந்த பெண் அருகே வந்ததும் திடீரென எழுந்து முழங்காலிட்டு மோதிரத்தை கொடுத்து தனது காதலை அந்த பெண்ணிடம் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
காதலை வெளிப்படுத்துவதற்கான நாடகம்
அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டது என தெரிந்து அப்பகுதியில் இருந்தவர்களும் பதறிப் போக பின்பு தான் அது காதலை வெளிப்படுத்துவதற்கான நாடகம் என்பதும் தெரியவந்துள்ளது.
மிக மிக வித்தியாசமாக வாலிபர் காதலை வெளிப்படுத்தியது தொடர்பாக இந்த வீடியோ இணையத்தை தற்போது கலக்கி வருவதுடன் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.
He faked the injury to propose to his girlfriend ??
— ESPN FC (@ESPNFC) January 2, 2023
(via Klaudhajdari/TT) pic.twitter.com/h1xyNcmIKN
