சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் - பின்னர் நடந்த சம்பவம்
55 வயதுடைய குடும்பஸ்தரால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட 14 வயது சிறுமி, சந்தேகநபருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவருடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் பன்னல எலபொடகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கைதாகி பிணையில் விடுவிப்பு
2022 ஆம் ஆண்டு ஒரு நாளில், சிறுமியின் வீட்டில் தந்தையுடன் மது அருந்திய சந்தேக நபர், சிறுமியின் தந்தை அயர்ந்து தூங்கிய நிலையில் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சில சமயங்களில் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேக நபருடன் சிறுமி தப்பி ஓட்டம்
நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எனினும் சந்தேக நபருடன் தனது மகள் தப்பிச் சென்றுள்ளதாக பன்னல காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய பன்னல காவல் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ஆரியரத்னவின் பணிப்புரையின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி சாவித்திரி சிறிமான்ன மற்றும் WPC 8812 ஷியாமலி ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.